undefined

பகீர்... அரவை இயந்திரத்தில் சிக்கி கை, கால்களை இழந்து வாலிபர் துடிதுடித்து பலி!

 

திருநெல்வேலி மாவட்டம், மானூர்  ஊத்தான்பட்டியில் வசித்து வருபவர்  பெருமாள். இவரது மகன் பேச்சிக்குட்டி.  இவர் தனியாருக்‌கு சொந்தமான மக்காச்சோள கதிர் அறுவடை செய்யும் டிராக்டர்  ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.  

இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள வேங்கிபாளையத்தில் ராஜேஸ்வரிக்கு சொந்தமான தோட்டத்தில் மக்காச்சோள கதிர் அரவை பணியில் ஈடுபட்‌டிருந்தார். அப்போது இயந்திரத்தில் மக்காச்சோளதட்டுகள் சிக்கிக் கொண்டன.

இதனை எடுப்பதற்காக  ஓட்டுநர் பேச்சிக்குட்டி முயற்சித்தார்.  இயந்திரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்போது அதனை எடுக்க முற்பட்டார். இந்நிலையில்  பேச்சுக்குட்டியின் கை  திடீரென இயந்திரத்தில் சிக்கி அவரை உள்ளே இழுத்துவிட்டது. இதில் கை மற்றும் கால் இயந்திரத்தில் சிக்கி துண்டாகிவிட்டது.

இதனால் பேச்சிக்குட்டி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதும் இதன் பேரில்    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!