undefined

ஆப்கானிஸ்தான் விமானப் படைத் தளம் மீது  பாகிஸ்தான் தாக்குதல்!  

 

ஆப்கானிஸ்தானின் பிரபல பாக்ரம் விமானப் படைத் தளத்தை பாகிஸ்தான் வெகுவாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப். 26 முதல் “கசாப் லில் ஹக்” என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் இருநாடுகள் இடையிலான 2,600 கிலோமீட்டர் எல்லையில் அமைந்துள்ள 53 ராணுவத் தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. பாக்ரம் விமானப் படைத் தளத்தில் அமைந்த முக்கிய கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டது என்றும், 50-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பே, பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசை குற்றம்சாட்டி வந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பாக்ரம் விமானப் படைத் தளத்தை மீண்டும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!