சபரிமலையில் பாகிஸ்தான் கொடி? பெரும் பரபரப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இந்த சூழலில், கோயில் அருகே பாகிஸ்தான் கொடி கட்டப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலை அறிந்த போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். கோயில் அருகே பக்தர்கள் கூட்டமாக அமர்ந்திருந்த இடத்தில், ஒரு கம்பியில் பச்சை நிற கொடி கட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சோதனை செய்ததில், அது பாகிஸ்தான் கொடி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குழுக்களாக வரும் பக்தர்கள், தங்கள் குழுவினரை அடையாளம் காண இவ்வாறு கொடிகளை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் கொண்டு வரப்பட்ட பச்சை நிற கொடியை தவறாக வீடியோ எடுத்து, பாகிஸ்தான் கொடி என பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!