காஷ்மீரில் ஹிந்து-முஸ்லிம் மோதலை பாகிஸ்தானியர்கள் தான் உண்டாக்குகின்றனர்.... கணவரை இழந்த பெண் கதறல்! 

 
இந்தியாவில்  நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் குஜராத் மாநிலம் சூரத் நகரின் வராச்சா பகுதியை சேர்ந்த ஷைலேஷ் கல்தியா  தனது குடும்பத்தோடு பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.  தனது தந்தை ஷைலேஷ் கல்தியா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததை அவரது மகன் நக்ஷ் கல்தியா சம்பவ இடத்தில் இருந்து பார்த்துள்ளார் .


இது குறித்து   சிறுவன்  ​”மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமில் நாங்கள் இருந்தோம். அப்போது திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. பயங்கரவாதிகள் அப்பகுதிக்குள் நுழைந்ததை நாங்கள் உணர்ந்து மறைவாக இருந்தோம்.
சிறிது நேரத்தில் அவர்கள் எங்களை கண்டுபிடித்தனர். இரண்டு பயங்கரவாதிகளை நான் நேரில் பார்த்தேன். அவர்களில் ஒருவர் முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களை தனித்தனியாக பிரிந்து இருக்கும்படி கூறினார். உள்ளூரில் வசித்தவர்கள்  நாங்கள் கீழே இறங்கிய ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்திய இராணுவம் வந்துவிடும் எனக் கூறினார்கள். பயங்கரவாதிகள் என் தந்தையை பேச விடவில்லை.” என அழுது கொண்டே கூறினான்.  

அவரது மனைவி ஷீத்தல் கல்தியா துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் ஒளிந்து கொள்ள ஓடி வந்தோம். ஆனால், அந்த பகுதி முழுவதையும் வெளிப்படையாக இருந்ததால் மறைந்திருக்க இடமில்லை. திடீரென எங்கள் எதிரில் ஒரு பயங்கரவாதி நின்றான். இந்துக்களை ஒருபுறமும், இஸ்லாமியர்களை மறுபுறமும் பிரிந்து நிற்குமாறு கட்டளையிட்டான். எல்லாருமே ஒரு நீளமான துப்பாக்கியை வைத்திருந்தார்கள். சுட்டுக் கொல்வதற்காக அங்கேயே நின்றுகொண்டிருந்தான். 6-7 பேரை எங்களுக்கு முன்னால் சுட்டுக் கொன்றான். சுடப்பட்ட 2-3 நிமிடங்களுக்கு மேல் அந்த ஆட்கள் உயிர் பிழைக்கவில்லை. காஷ்மீரில் ஹிந்து-முஸ்லிம் மோதலை நாங்கள் அனுபவிக்கவில்லை. பாகிஸ்தானியர்கள்தான் அங்கு மோதல்களை உண்டாக்குகிறார்கள் என நான் உணர்கிறேன்.” எனக் கூறினார்.  
தாக்குதல் பற்றி அறிந்ததும் உள்ளூர் காஷ்மீர் மக்கள் தான் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு குதிரை சவாரி செய்து பிழைப்பு நடத்தி வந்த சையது ஹுசைன் ஷா எனும் இஸ்லாமிய நபர் சுற்றுலா பயணிகளை காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?