ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் பாலமேடு, அலங்காநல்லூர்!
ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற உள்ளன. இதன்படி பாலமேட்டில் வரும் 16-ந் தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பாலமேட்டில் மஞ்ச மலை சுவாமி ஆற்றுத் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது. பார்வையாளர்கள் அமரும் மாடம், இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அலங்காநல்லூரில் கோட்டைமுனி சாமி திடலில் ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. வாடிவாசல், இரும்பு தடுப்பு மேடைகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அமரும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. பாலமேட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், அலங்காநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் போட்டியை தொடங்கி வைக்க உள்ளனர். இதையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!