undefined

 பாலஸ்தீன ஆதரவு போஸ்டர்கள் ஒட்டிய பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்!

 
 

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில், புஷ்கர் பகுதிகளில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டிய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் தீ மற்றும் அனுஷி எம்மா கிரிஸ்டீன் ஆகியோருக்கு இந்தியாவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 21ஆம் தேதி காவல் துறைக்கு இந்த தகவல் கிடைத்தது.

விசாரணையில், இருவரும் வெளிநாட்டவர்கள் என்பதால், இந்தியாவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காவல் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதன்படி, குடியேற்ற அதிகாரிகள் அவர்களுக்கு வெளியேறுமாறு அதிகாரபூர்வ நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

முன்னதாக, புஷ்கர் பகுதியில் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதிகளில் ஒட்டப்பட்ட அனைத்து போஸ்டர்களையும் அதிகாரிகள் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!