undefined

 சூறைக்காற்று சீற்றம்… பாம்பன் பாலம் மூடல், நடு வழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்... பயணிகள் கடும் அவதி!  

 
 

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. நேற்று நள்ளிரவு முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. பாம்பனில் அதிகாலை 60 கி.மீ வேகத்தில் தொடங்கிய காற்று, பிற்பகலில் 65 கி.மீ வேகத்தை தாண்டியது.

சூறைக்காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் ரெட் சிக்னல் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அதிகாலை முதல் ரயில்கள் பாலத்தை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதும், சில ரயில்கள் வழிமாற்றப்பட்டதும் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நடுவழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உடமைகளுடன் தண்டவாளத்தில் நடந்தே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. திடீர் மாற்றங்களால் ராமேஸ்வரம் பகுதியில் கடும் பரபரப்பு நிலவியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!