புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்... புதிய விதிமுறை அமல்!

 

மத்திய வருமான வரித்துறை பான்   கார்டு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான விதிமுறைகளில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி, இனிமேல் புதிய பான் கார்டு பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ்  சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

இதுவரை பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவை பிறப்புத் தேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போது தரவு துல்லியத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பிறப்புச் சான்றிதழை முதன்மை ஆவணமாகக் கருத வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 1, 2024-க்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு பான் கார்டு விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் மிக அவசியமான ஆவணமாக இருக்கும்.

பான் கார்டு தரவுகளில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்கவும், தனிநபரின் அடையாளத்தை இன்னும் வலிமையாக உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றாலும், பெயர்திருத்தம் அல்லது பிறந்த தேதி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளும் போது பிறப்புச் சான்றிதழ் கேட்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து ஆவணங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!