"பனையூர் பண்ணையார்... ஒன்னா நம்பர் குப்பை" - விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக!
திமுக மற்றும் அதிமுகவை 'ஒரே குப்பையில் வீசப்பட வேண்டியவை' என விஜய் விமர்சித்த நிலையில், அதிமுக தரப்பு விஜய்யின் கடந்த கால சினிமா மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டித் தாக்கியுள்ளது.
சினிமா டிக்கெட்டுகளைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய், ஊழலைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர் என அதிமுக சாடியுள்ளது. தனது படம் வெளியாக வேண்டும் என்பதற்காக அப்போதைய முதலமைச்சர் (ஜெயலலிதா) வீட்டின் முன் 5 மணி நேரம் காத்திருந்தவர் விஜய் என அவரது "துணிச்சலை" அதிமுக கிண்டல் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை அருகில் வைத்துக்கொண்டு, அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என விமர்சிப்பது விஜய்யின் இரட்டை நிலையைத் தான் காட்டுகிறது.
கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், அவர்களைப் பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து செல்ஃப் புரோமோஷன் செய்து கொண்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. ஏதேனும் வழக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் 72 நாட்களுக்கும் மேல் பனையூர் வீட்டில் பதுங்கியிருந்தவர், இப்போது வீரத்தைப் பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது என அதிமுக விமர்சித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!