பகீர்... பஞ்சாயத்து செய்த காவலருக்கு சராமாரி அடி உதை... வைரல் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு குழுக்களுக்கு இடையே பயங்கரத் தகராறு நடப்பதாகத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அப்போது மோதலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்த முற்பட்டபோது நிலைமை விபரீதமானது.
இந்தச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் படம்பிடிக்க, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் 'காட்டுத்தீ' போலப் பரவி வருகிறது. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு காவலர்களையே தாக்கிய அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்களிடையே சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!