பங்குனி உத்திரம்: என்னென்ன சிறப்பு? எப்படி வழிபட்டால் முழு பலன்?
பங்குனி மாதம் தமிழ் மாதத்தின் கடைசி மாதம். இந்த பங்குனி மாதத்தில், உத்திரம் நட்சத்திரத்தில் தான் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரன் பார்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது, ஐயப்பனின் அவதார தினம் இந்த பங்குனி உத்திர தினம் தான். அனைத்து சிவ ஆலயங்களிலும் பங்குனி உத்திர திருநாள் சிறப்பாக கொண்டாடப்படும். பங்குனி உத்திர திருநாளில் தான் சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார் என்பது ஐதிகம்.
இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல ஆலயங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும். முருக பக்தர்கள் பால்குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடு நடத்துவர்.
தமிழர் திருவிழாக்களை பொறுத்தமட்டில் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என பௌர்ணமியும், நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் தான் கொண்டாடப்படும். அந்த நாளில் விரதத்தை கொண்டாடுவது தான் சிறப்பு.
அந்த வகையில் பங்குனியில் உத்திர நட்சத்திரம் பெளர்ணமியும் இன்று இணைந்து வருகிறது. இந்த பெளர்ணமி அதனால் கூடுதல் விசேஷம் பெறுகிறது. பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வத்தை வழிபடுவதும் மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!