undefined

திருவண்ணாமலையில் பயங்கரம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழப்பு!

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த கோர விபத்தில், பள்ளி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள மண்டகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், இன்று காலை ஒரு பழைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக அந்த வீட்டின் சிமெண்ட் மேற்கூரை திடீரென இடிந்து மாணவர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சூர்யா (10) எனும் 5-ம் வகுப்பு படித்து வந்த மாணவரும், சந்தோஷ் (8) எனும் 3-ம் வகுப்பு படித்து வந்த மாணவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், இடிபாடுகளை அகற்றி சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள்ளாகவே அவர்கள் உயிர் பிரிந்திருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் காவல்துறையினர், மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி விடுமுறை தினத்தில் விளையாடச் சென்ற சிறுவர்கள் சடலமாக திரும்பியது பெற்றோர், உறவினர்களிடையே பெரும் கதறலை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!