ஏப்ரல் 9ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நேற்றுடன் (மார்ச் 26) வெற்றிகரமாக முடிவடைந்தன. கடைசி நாளான நேற்று கணினி அறிவியல், கணினிப் பயன்பாடு, இந்தியப் பண்பாடு மற்றும் சிறப்புத் தமிழ் உள்ளிட்ட 11 முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. தேர்வுகள் முடிவடைந்ததையடுத்து, மாணவர்கள் தற்போது கோடை விடுமுறையைக் கொண்டாடத் தயாராகி வரும் வேளையில், தேர்வுத் துறை அடுத்தகட்டப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணியை ஏப்ரல் 9-ஆம் தேதி தொடங்கத் தேர்வுத் துறை அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது. இந்தப் பணியில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 45,000 முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காகத் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகச் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. எவ்விதத் தவறும் நடக்காத வகையில் துல்லியமாக விடைத்தாள்களைத் திருத்த ஆசிரியர்களுக்குச் சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகள் ஒருபுறம் நடந்தாலும், மாணவர்களின் உயர்கல்வி பாதிக்காத வகையில் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடத் தேர்வுத் துறை முனைப்புக் காட்டி வருகிறது. ஏப்ரல் 9-ல் தொடங்கும் இப்பணி சுமார் 2 வாரங்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்ததால் உயர்கல்வி குறித்த ஆலோசனைகளில் பெற்றோர்களும் மாணவர்களும் தற்போது பிஸியாகியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!