பிரதமர் மோடியுடன் பொங்கல் கொண்டாடிய பராசக்தி குழுவினர்... சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!
தில்லியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் பராசக்தி திரைப்படக் குழுவினரும் இன்று பங்கேற்றனர். நிகழ்வு முடிந்த பிறகு தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன் பேசினார்.
அப்போது, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்த அவர், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருவதாக கூறினார். பராசக்தி திரைப்படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை என்றும், மக்கள் படத்தை சரியான முறையில் புரிந்து கொள்வார்கள் என்றும் விளக்கம் அளித்தார். படத்தை முழுமையாக பார்த்தால் அதன் நோக்கம் தெளிவாக புரியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தனக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என சிவகார்த்திகேயன் தெரிவித்தார். விஜய்யின் அரசியல் பயணத்திற்கு தனிப்பட்ட முறையிலும் வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். இதற்கிடையே, பராசக்தி திரைப்படம் வரலாற்றை திரித்துக் காட்டியதாக தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!