ரூ.100 கோடி வசூல்… சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ சாதனை!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் எழுச்சியை மையமாகக் கொண்டு படம் உருவாகியது. வெளியானபோது கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவால் வசூலில் வேகமாக உயர்ந்தது.
தற்போது ரூ.100 கோடி வசூலை கடந்துள்ள பராசக்தி படக்குழுவுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரோட்டர்டமில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு இப்படம் தேர்வாகியுள்ளது. இது படத்துக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!