undefined

பெற்றோர்களே உஷார்.. கொசு விரட்டி திரவத்தால் உயிரிழந்த குழந்தை!

 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சக்ரதாரா பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கொசுவை விரட்டும் சுருள், மின்சாரம் முலம் இயக்கப்படும் ரசாயன திரவம், பேட்டரியில் இயங்கும் பேட் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தினேஷ் சவுத்ரி என்பவரும் தனது வீட்டில் மின்சாரத்தில் இயங்கும் ரசாயனம் திரவம் கொசு விரட்டியை பயன்படுத்தி வந்துள்ளார். 

ஒரு நாள் அந்த திரவத்தை கீழே வைத்துள்ளார். அதாவது குழந்தைக்கு எட்டும் தூரத்தில் வைத்ததாக கூறப்படுகிறது. தினேஷ் சவுத்ரியின்  ஒன்றரை வயது மகள் ரித்தி, கொசு விரட்டி திரவத்தை எதிர்பாராத விதமாக குடித்துள்ளார். இதைக் கண்ட தினேஷ் பெரும் அதிர்ச்சி அடைந்து அவரை பிடித்துள்ளார். எனினும் திரவத்தை குடித்த சில நிமிடங்களில் குழந்தை ரித்திக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையறிந்த தினேஷ் ரித்தியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை அனுமதித்து தீவிர  சிகிச்சை அளித்த போதும் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?