திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் ரத்து... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

 

தெலங்கானா மாநிலத்தில் திரையரங்குகளில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என  உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் சினிமா டிக்கெட் வாங்கிய ரசிகர்களிடம் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிபதி கருத்து  தெரிவித்துள்ளார். திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் நீண்ட காலமாக தொடர் புகார்கள் கூறப்பட்டு  வந்தன.

முன்னதாக கே.சி. சந்திரசேகரராவ் முதலமைச்சராக இருந்த காலத்தில் சிங்கிள் திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனக் கூறப்பட்டது.  அதன்படி மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அந்த விதியை பின்பற்றி வந்தன. ஆனால் சிங்கிள் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டதால்  நிதி சிக்கல் ஏற்படுவதாக  மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து  2021 ஆம் ஆண்டு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஒரு திரையரங்கில் ரூ.20 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பிரேம் ராமாவத் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிங்கிள் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் டிக்கெட் வைத்திருக்கும் பார்வையாளர்களுக்கு பார்க்கிங் இலவசமாக வழங்க வேண்டும் எனவும்,   இதை உடனடியாக அமல்படுத்த நகராட்சி அமைப்புகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும்  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!