undefined

 பர்வதமலை   ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி...! 
 

 
 

திருவண்ணாமலை அருகே உள்ள பருவதமலை மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் தரிசனம் மற்றும் ஏற்றம் இப்போது புதிய விதிகளுடன் நடைபெறும் என்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மலை பாதைகள் குறுகியதாலும், பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் ஒன்றாக வருவதால் கூட்ட நெரிசல், பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான காரணங்களுக்காக, ஏற அனுமதி மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும்.

அரசு அதிகாரிகள் கூறியதாவது, தினமும் அதிகபட்சமாக 100 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர், மேலும் 18 வயதிற்கு கீழானதும் 60 வயதிற்கு மேலானதும், கர்ப்பிணிகள் மற்றும் நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் போன்றோர் தற்போது அனுமதி பெற முடியாது என்று கூறப்பட்டுள்ளது. மலையேறும் நேரம் காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில்   மட்டுமே அனுமதிக்கப்படும்.பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்து முடிக்கும் வகையில், ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டதும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் புதிய கட்டுப்பாடுகள் தற்போது கடைபிடிக்கப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!