விமான கழிப்பறையில் ‘பீடி’ புகைத்த பயணி... ! 

 

சமீபகாலமாக விமானப் பயணங்களில் பெரும் சர்ச்சைகள்  ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் தில்லியிலிருந்து கோவாவுக்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் ‘பீடி’ புகைத்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்ற பயணி ஆகாசா ஏர் விமானத்தில் சனிக்கிழமை பயணம் செய்தார். அப்போது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.   விமான நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விமானத்தின் கழிப்பறைக்குள் சென்ற அந்த பயணி அங்கு ‘பீடி’ புகைத்ததாக தெரிகிறது. மேலும் அவரது உடமையில் லைட்டர் இருந்ததும் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விமானத்தில் இத்தகைய செயல்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது மிகுந்த கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

விமானம் கோவா வந்ததும் அந்த பயணி உரிய அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மோபா விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!