விமான ஜன்னலில் தனது பெயரை கீறிவைத்த பயணி... !
இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஜன்னல் கண்ணாடியில் தனது பெயரை ‘மான்விக்’ என கீறிய அதிர்ச்சிகர சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவிடங்களில் பெயர் கிறுக்கும் பழக்கம் ஒருபோதும் விமானத்தில் வந்ததா என்பது பயணிகளையும் நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புகைப்படங்களில் கூர்மையான பொருளால் ஜன்னல் அடுக்கை சேதப்படுத்தி பெயரை எழுதப்பட்டுள்ளது தெளிவாக காணப்படுகிறது. இது விமானத்தின் பாதுகாப்புக்கும் சொத்துக்குமான நேரடியான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பலர், இப்படிப்பட்ட பயணிகளை கண்டறிந்து விமானப் பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். குழந்தையோ அல்லது பெரியவரோ செய்ததா என்பதும் வாக்குவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. சம்பந்தப்பட்ட பயணிக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!