undefined

பாட்னா உணவகத்தில்  வெளிநாட்டு வாழ் இந்தியர்   பலி!

 

பாட்னா ஜக்கன்பூர் பகுதியில் உள்ள உணவக அறையில் பிரிட்டனில் வாழ்ந்த இந்தியர் அஜய் குமார் சர்மா (76) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சர்மா ஜனவரி 18 முதல் அந்த உணவகத்தில் தங்கியிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு அறை திறக்கப்படாததால், திங்கள்கிழமை மாலை உணவக ஊழியர்கள் கதவைத் தட்டினர், பதில் பெறவில்லை.

ஊழியர்கள் போலீஸை அழைத்து, பாதுகாப்புப் பணியாளர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அவர் படுக்கையில் சடலமாக இருந்தார். உடலில் வெளிக்காயங்கள் காணப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் அறையிலிருந்து ஆதாரங்களை சேகரித்தனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர், மரணத்தின் சரியான காரணம் தெரிய வரும். லண்டனில் உள்ள குடும்பத்தினருக்கு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!