ஒட்டகச்சிவிங்கிகளை தத்தெடுத்த பவன் கல்யாண்… !
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விசாகப்பட்டினம் உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்றார். தனது தாய் அஞ்சனர் தேவியின் பிறந்தநாளை முன்னிட்டு, இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளை ஒரு வருடத்திற்கு தத்தெடுத்தார். இந்த நிகழ்வு பூங்காவில் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து பேசிய பவன் கல்யாண், தங்களது குடும்பம் முழுவதும் விலங்கு பிரியர்கள் என்றார். வனவிலங்குகளை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் தெரிவித்தார். சுற்றுச்சூழல் சமநிலைக்கு வனவிலங்குகள் மிக முக்கியம் என்றார்.
மேலும், உயிரியல் பூங்காக்களின் வளர்ச்சியில் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். விலங்குகளை தத்தெடுப்பது நல்ல முயற்சி என்றும் கூறினார். இத்தகைய செயல்கள் இயற்கையை காக்க உதவும் என அவர் வலியுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!