undefined

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம்... திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு!

 

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடா்ந்து பெய்துவரும் நிலையில், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் நேற்று  காலை 6 மணிக்கு 45.52 அடியாக அதிகரித்தது. வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் அணையின் மறுகால் மதகுகள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு விநாடிக்கு 526 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. 

அப்போது அணைக்கு விநாடிக்கு 1233 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசனக் கால்வாயில் விநாடிக்கு 503 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. பேச்சிப்பாறை அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீா் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாகப் பாய்கிறது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

மாவட்டத்தின் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவந்த நிலையில், நேற்று  சற்று தணிந்தது. பகலில் அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால் மாலையில் அணையின் நீா்வரத்து விநாடிக்கு 800 கன அடியாகக் குறைந்தது. மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 400 கன அடியாக குறைக்கப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் நேற்று  காலை நிலவரப்படி, 65.45 அடியாக உயா்ந்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 77 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது