மக்கள் பீதி... திபெத்தில் நள்ளிரவில் நிலநடுக்கம்!
இமயமலையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சீனாவின் தன்னாட்சி மாகாணமான திபெத்தில் நேற்று நள்ளிரவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. பொங்கல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்திய நேரப்படி நேற்று இரவு (ஜனவரி 13) 11:50 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.8 ஆக பதிவாகியுள்ளது.
இது நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 30.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 81.25 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இதன் மையப்புள்ளி அமைந்திருந்தது.
குறைந்த அளவிலான நிலநடுக்கம் என்பதால், பெரிய அளவிலான கட்டடச் சேதங்களோ அல்லது உயிர்ச்சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் சீன ஊடகங்களில் இருந்து வெளியாகவில்லை. இருப்பினும், நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!