மக்களே உஷார்.. 211 மருந்துகள் தரமற்றவை; 5 மருத்துகள் போலி - மத்திய அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள மருந்துக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்து, மாத்திரைகளின் தரத்தையும் உறுதி செய்யும் பணியில் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
காய்ச்சல், சளித்தொற்று, கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் 211 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆய்வில் 5 மருந்துகள் போலியானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தரமற்ற மற்றும் போலியான மருந்துகளைப் பயன்படுத்துவது உடல்நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இது குறித்த தகவல் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.
தரமற்ற மருந்துகள் தொடர்பான முழு விவரங்களையும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cdsco.gov.in ல் பொதுமக்கள் பார்வையிடலாம். இதன் மூலம், தாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் பட்டியலில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கலாம்.
தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த மருந்து நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், இந்த நிறுவனங்கள் மீது அடுத்த கட்ட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் மருந்தின் தரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!