undefined

  பொதுமக்களே உஷார்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ஓடும் பேருந்தில் குழுவாக மொபைல் திருட்டில் ஈடுபடும் திருடர்கள்!  

 


இந்தியாவின்  தலைநகரமான டெல்லியில், திருடர்களின் செயல்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில்  சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. டிடிசி  பேருந்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில், ஒரு திருடர்கள் கும்பல் திட்டமிட்ட முறையில் ஒரு நபரின் மொபைலை திருடுகிறது.  அந்த நபருக்கே தன்னுடைய மொபைல் போன் திருடப்படுவதைப் பற்றிய எந்த பிரக்ஞையும் ஏற்படவில்லை என்பது தான் உச்சகட்ட அதிர்ச்சி.  
இந்த வீடியோவில், ஒரே பேருந்தில் குழுவாக பயணிக்கும் பிக்பாக்கெட் கும்பல், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவியுடன் செயலில் இறங்குகின்றனர். அவர்கள் முதலில் அந்த நபருக்கு இடையில் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர்.  ஒருவர் அவரை தள்ளும்போது, மற்றொருவர் ரகசியமாக அவரது மொபைலை எடுத்து விடுகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது