undefined

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க குவிந்த மக்கள்... நீண்ட வரிசையில் காத்திருப்பு!

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் இன்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க குவிந்தனர். இதனால் மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். ஆனால் ஒரே ஒரு கவுன்டர் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை பதிவு செய்தனர். இதனால் ஆண், பெண், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்கள் நலனுக்காக கூடுதல் கவுண்டர்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது