undefined

பட்டுப்புடவை வாங்க அதிகாலை 4 மணிக்கே வரிசையில் நின்ற மக்கள் - டோக்கன் முறை அமல்!

 

கர்நாடக அரசின் பட்டுத் தொழில் கழகத்தின் நேரடி விற்பனை நிலையங்களில் கிடைக்கும் அசல் மைசூரு பட்டுப் புடவைகளுக்கு உள்ள மவுசு, மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் தற்போது நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலை 4 மணிக்கே சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் விற்பனை நிலையத்தின் முன் குவியத் தொடங்கினர். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால், பலர் தங்களுடன் நாற்காலிகள் மற்றும் போர்வைகளை எடுத்து வந்து அமர்ந்திருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடை ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பெரிதும் திணறினர்.

நெரிசலைத் தவிர்க்கவும், அனைவருக்கும் புடவை கிடைப்பதை உறுதி செய்யவும் கடந்த 5 ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் 'டோக்கன் நடைமுறை' நேற்றும் கடைப்பிடிக்கப்பட்டது. காலை 10 மணிக்குக் கடை திறக்கப்பட்டதும் முன்னால் நின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஒரு புடவையின் விலை ரூ. 23,000 முதல் ரூ. 2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரே ஒரு புடவை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

மிக முக்கியமாக, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான நிறத்தையோ அல்லது டிசைனையோ பொறுமையாகத் தேர்வு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பில் உள்ள புடவைகளை மட்டுமே அவர்கள் வாங்க முடிந்தது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!