undefined

அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்...  மியான்மரில்  மீண்டும் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!
 

 

மியான்மர் நாட்டில்  பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.  இது குறித்து தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் நிலநடுக்கத்தை அடுத்து  மக்கள் அலறியடுத்து ஓட்டம் பிடித்ததாக  கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் இழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து  இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இது அடிப்படையில் மிக ஆழமில்லாத அதிர்வாக இருந்ததால், பின்னடைவு அதிர்வுகள் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், மிதமான ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் நேரடியாக நிலத்தளத்தில் தாக்கம் ஏற்படுத்துவதால், பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும்.

 

இதேபோல், நேற்று அந்நாட்டில் 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளே மீண்டும் நிலம் குலுங்கியது இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.  

இதற்குமுன், மார்ச் 28 அன்று அந்நாட்டில் 7.7 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக லட்சக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?