பரபரப்பு... கல்லூரி மாணவர்கள் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரின் வீடுகளை பொதுமக்கள் சூறை!
தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் மூவரும் சாராய விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கல்லூரி மாணவர்களான ஹரிசக்தியும், ஹரிஷ் இருவரும் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்
இதனால் ஆத்திரம் அடைந்த சாராய வியாபாரிகள் இரண்டு கல்லூரி மாணவர்களையும் கொலை செய்ததாக தகவல் வெளியானது. ராஜ்குமார், தங்கதுரை கைது செய்யப்பட்ட நிலையில் மூவேந்தனை போலீசார் தேடி வருகின்றனர். இருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல, முன்விரோதம் தான் காரணம் எனவும் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இருதரப்பிற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் மூவரின் வீடுகளை பொதுமக்கள் சூறையாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!