"திமுக கூட்டணி வெற்றிபெற மக்கள் உறுதி ஏற்க வேண்டும்" - வைகோ புத்தாண்டு வாழ்த்து!
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், எதிர்வரும் 2026-ம் ஆண்டு இந்திய மற்றும் தமிழக அரசியலில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கால ஓட்டத்தை விநாடிகள் முதல் ஆண்டுகள் வரை மனிதகுலம் முறைப்படுத்திக் கொண்ட ஒழுங்குமுறையைப் பாராட்டிய வைகோ, இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பின் 2000 ஆண்டுகளைக் கடந்து இன்று உலகம் 2026-ல் அடி எடுத்து வைப்பதைக் குறிப்பிட்டார்.
ஜனவரி 1-ம் தேதி ஆஸ்திரேலியா, சூடான், செக் குடியரசு உள்ளிட்ட பல நாடுகள் விடுதலை பெற்ற நாள் என்பதையும், ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தளை நீக்கப் பிரகடனம் செய்த நாள் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை வைகோ தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.
நதிநீர்ப் பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார விவகாரங்களில் மத்திய அரசு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்திய மக்களாட்சியின் அடித்தளத்தைத் தகர்த்து, மதவெறியைத் திணிக்கும் சர்வாதிகாரப் பாசிச ஆட்சியை நிலைநாட்ட இந்துத்துவ சக்திகள் முயல்வதாக அவர் எச்சரித்துள்ளார்.
மலர்ச்சியான இந்த 2026-ம் ஆண்டில், தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் வலுப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்திய வைகோ: "2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நன்னாளில் உறுதி ஏற்க வேண்டும்" என்று தனது தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!