மாற்றுத்திறனாளிகள் உற்சாகம்... 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்..!
இதன் மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும். நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் சார்பாக இரண்டு சட்டமுன்வடிவுகள் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் 14,000 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 650 மாற்றுத்திறனாளிகள், கிராமப் பஞ்சாயத்து 12,913, ஊராட்சி ஒன்றியம் 388, மாவட்ட ஊராட்சியில் 37 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்படுவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!