’ பிரீயட்’ னா ஆதாரம் காட்டு... மாணவர்கள் முன்னால் இழிவுபடுத்திய விரிவுரையாளர்... மயங்கி சரிந்து கல்லூரி மாணவி பலி!
Jan 10, 2026, 15:41 IST
ஹைதராபாத்தில் அரசு கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவி வர்ஷினி. ஒரு நாள் கல்லூரிக்கு தாமதமாக வந்ததால் வர்ஷினியை வகுப்பிற்குள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. உடல்நலக் குறைவால் தாமதம் ஏற்பட்டதாகவும், தான் மாதவிடாய் காலத்தில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அந்த விரிவுரையாளர் இதை நம்பாமல், ஆதாரம் கேட்டு சக மாணவர்கள் முன்னிலையில் வர்ஷினியை இழிவுபடுத்தி “நடிக்கிறாய்” என்று திட்டியதாக கூறப்படுகிறது.
மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவுதான் மரணத்துக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறினாலும், பேராசிரியரின் அவமானகரமான பேச்சும் அதனால் ஏற்பட்ட கடும் மன அழுத்தமுமே தங்கள் மகளின் உயிரைப் பறித்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு பெண் தனது இயல்பான உடல் நிலைக்கே ஆதாரம் கொடுக்க வேண்டிய நிலை இன்னும் சமூகத்தில் இருப்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!