மூச்சு முட்டும் பெருங்களத்தூர்... திணறிய நெடுஞ்சாலை... விடிய விடிய வாகனங்களின் இரைச்சல்... சொந்த ஊர்களுக்குப் புறப்பட்ட பொதுமக்கள்!
விடிய விடிய வாகனங்களின் இரைச்சல் தான். பொங்கல் பண்டிகையைத் தங்களது சொந்த ஊர்களில் சொந்தபந்தங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக, சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் நேற்று மாலை முதலே நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.
இன்று முதல் 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இன்று மாலை முதல் அதிகமானோர் சென்னையை விட்டு ஒரே நேரத்தில் வெளியேறி வருவதால் ஜி.எஸ்.டி சாலையில் குறிப்பாகப் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் கடந்து வண்டலூர் செல்வதற்குச் சாதாரணமாக 10 நிமிடங்கள் ஆகும் நிலையில், தற்போது 1 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளுக்காகக் காத்திருப்பதாலும், ஆம்னி பேருந்துகள் வரிசையாக நிற்பதாலும் சாலையே தெரியாத அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்றன.
போக்குவரத்தைச் சீர்செய்ய நூற்றுக்கணக்கான போலீசார் பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர். இருப்பினும், வாகனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் நெரிசலைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது. விடிய விடிய வாகனங்களின் இரைச்சல் சபதம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதுமே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!