undefined

இனி மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! 

 
 

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடும் குளிருடன் பனியும் காற்று மாசும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனந்த் விகார், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதிகளில் காற்று தரம் மிகவும் மோசமாகியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கு சுவாச சிக்கல்கள் ஏற்படுகின்றன. காலை நேரங்களில் பனி காரணமாக வானிலை தெளிவில்லாமல் காணப்படுகிறது.

நகரின் பல பகுதிகள் முழுவதும் பனிப்போர்வை போர்த்தியதை போல காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. காலை நேரங்களில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக விமான நிலையத்திலும் விமான போக்குவரத்து தடைபட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இந்த சூழ்நிலையில் காற்று மாசை குறைக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும். கேமரா மூலம் கண்காணிப்பும் செய்யப்படும். மேலும் டெல்லியில் பதிவு செய்யாத வாகனங்கள் நுழைவதற்கு தடை, கட்டுமான பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!