நள்ளிரவில் லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு… ஓட்டுநர் படுகாயம்!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருதம்புத்தூரில் உள்ள கல் குவாரியிலிருந்து கேரளாவுக்கு சென்ற லாரி, அம்பேத்கர் நகர் அருகே வந்தபோது வழிமறிக்கப்பட்டது. அப்போது திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த தாக்குதலில் லாரி ஓட்டுநரான செங்கோட்டை நாராயணசாமியின் மகன் சுப்பிரமணியன் (38) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆலங்குளம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. லாரிகள் கிராம சாலைகளில் செல்வதால் சாலைகள் சேதமடைவதாக மக்கள் நீண்ட நாட்களாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அதனுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!