ஈரான் போர் தாக்கம்… 95 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு, இந்தியாவில் மாற்றம் இல்லை!

 

ஈரான் தொடர்பான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. உலகின் 95-க்கும் மேற்பட்ட நாடுகளில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளில் பெட்ரோல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போதைக்கு அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். உலக சந்தை நிலவரத்தை பொருத்து அடுத்த கட்டத்தில் விலை மாற்றம் ஏற்படலாம் என வணிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!