25 லிட்டர் கேன்களில் வாங்கி குவிக்கும் மக்கள்... பெட்ரோல் பங்க்குகளில் அலைமோதும் கூட்டம்! 

 

புதுச்சேரியில் பெட்ரோல் தட்டுப்பாடு என்ற வதந்தி பரவியதால் பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நள்ளிரவு முதல் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து பெட்ரோல், டீசல் நிரப்பிச் செல்கின்றனர். பலர் 25 லிட்டர் தண்ணீர் கேன், 10 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாட்டில்களிலும் பெட்ரோலை வாங்கிக் குவிப்பதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கமாக புதுச்சேரியிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பல ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் உணவு வகைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த தடையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாடு என வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிககி விடுக்கப்பட்டுள்ளது.  இருந்தாலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தால் இன்று காலை முதலே பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!