பெட்ரோல் பங்க்குகளில் பதற்றம்... கேன்களில் தரலன்னா ... வாடிக்கையாளர்கள் மிரட்டல்!
தமிழகத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் பொதுமக்கள் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க முயற்சி செய்வதால் பல பெட்ரோல் பங்குகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கேன்களில் எரிபொருள் வழங்க மறுக்கும் போது வாடிக்கையாளர்கள் மிரட்டல் மற்றும் தகராறு செய்வதாக பங்க் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தமிழக காவல் துறை தலைவருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7 ஆயிரம் பெட்ரோல் பங்குகளுக்கும் உடனடியாக காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பங்குகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் பெட்ரோல் டீலர்கள் சங்கம் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது. கேன்களில் எரிபொருள் வழங்கக்கூடாது என்ற அரசின் உத்தரவை அவர்கள் வரவேற்றுள்ளனர். இருப்பினும் பொதுமக்களின் அச்சம் காரணமாக சில இடங்களில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!