உலகில் முதல் நாடாக ‘அவசர நிலை’ பிரகடனம்... பிலிப்பைன்சில் பெட்ரோல், டீசல் விலை ‘டபுள்’!
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் முதல் பாதிப்பாக, பிலிப்பைன்ஸ் நாடு தற்போது ‘தேசிய எரிசக்தி அவசர நிலை’ பிரகடனத்தை அறிவித்து அதிரடி காட்டியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 98 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் பிலிப்பைன்ஸில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரேடியாக இரண்டு மடங்கு உயர்ந்து மக்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.
அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இந்த அவசர நிலையை அறிவித்துள்ளதோடு, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தனிக்குழுவையும் அமைத்துள்ளார். நாட்டில் உள்ள எரிபொருள் கையிருப்பு வெறும் 45 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பெட்ரோலியப் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்யும் அதிகாரத்தை அரசு தனது கையில் எடுத்துள்ளது. மேலும், மின்கட்டண உயர்வைத் தவிர்க்கத் தற்காலிகமாக நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களையே அதிகம் பயன்படுத்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. ஈரானில் போர் மேகம் இன்னும் விலகாத நிலையில், மற்ற நாடுகளும் இதேபோன்ற நெருக்கடியைச் சந்திக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!