வாகன ஓட்டிகள் ஷாக்.... மீண்டும் ப்ரீமியம் பெட்ரோல் விலை  உயர்வு! 

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச அளவில் போர் பதற்றம் நீடிக்கிறது. ஈரானின் எண்ணெய் வயல்கள் தாக்கப்பட்டதற்குப் பதிலடியாக கத்தாரின் எண்ணெய் வயல்களை ஈரான் குறிவைத்ததோடு கடல்வழிப் பாதையையும் முடக்கியுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இந்தச் சூழலைச் சமாளிக்க இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது உயர்தர பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதன்படி சொகுசு வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பிரீமியம் ரக பெட்ரோல் லிட்டருக்கு 160 ரூபாய் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல் டீசல் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

விமான எரிபொருள் விலையும் ஒரு கிலோ லிட்டருக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டு இருப்பது நுகர்வோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் முதல் நூறு ஆக்டேன் தரவரிசை கொண்ட இந்த எரிபொருள் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சர்வதேசப் போர் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த விலை ஏற்றம் இந்தியப் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!