முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு... 1,996 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் அறிவிப்பு!
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவுள்ள எழுத்துத் தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் 809 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தமிழில் இருந்து கணினி அறிவியல் வரை 14 பாடங்களில் 1,996 காலிப்பணியிடங்களை நிரப்ப 2,36,530 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வு முடிவுகளும் இறுதி விடைக்குறிப்பும் வெளிவந்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் முடிவுகள், விடைக் குறிப்பு, மதிப்பெண் அடிப்படையிலான 1:1.25 விகிதச்சார்பு பட்டியலுடன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், அழைப்புக் கடிதம், சரிபார்ப்புக்கு தேவையான வழிமுறைகள், ஆளறிச் சான்றிதழ் படிவம் உள்ளிட்டவை அனைத்தையும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்; தனியாக அனுப்பிவைக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி, இடம் ஆகிய விவரங்கள் அழைப்புக் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதியில் நேரில் வராதவர்கள் அடுத்த கட்ட நியமன செயல்பாட்டில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் தொடர்பான குறைகள், வெளியானநாள் முதல் மூன்று நாட்களுக்குள் TRB மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்; பிற வழியில் வரும் மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!