80 வயதிலும் குறையாத வேகம்... 7வது முறையாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்!
கேரள அரசியலின் இரும்பு மனிதராகக் கருதப்படும் முதலமைச்சர் பினராயி விஜயன், இன்று (வியாழக்கிழமை) தனது சொந்தத் தொகுதியான தர்மடத்தில் அதிகாரப்பூர்வமாக வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். காலை 11 மணியளவில் தலச்சேரி சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனு ஆவணங்களைச் சமர்ப்பித்தார். இந்நிகழ்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அவரது அரசியல் செயலாளர்கள் உடனிருந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
தனது நீண்டகால அரசியல் பயணத்தில் 7-வது முறையாகச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பினராயி விஜயன், தர்மடம் தொகுதியிலிருந்து 3-வது முறையாகத் தொடர்ந்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் இதே தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரானவர். முன்னதாக, புதன்கிழமை அன்று தர்மடத்தில் பிரம்மாண்ட வாகனப் பேரணி நடத்தி தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
தர்மடம் தொகுதியில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் வி.பி. அப்துல் ரஷீத் மற்றும் பாஜக சார்பில் கே. ரஞ்சித் ஆகியோர் பினராயி விஜயனுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர். 80 வயதான பினராயி விஜயன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கேரளாவில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி அறிவிக்கப்படும் என்பதால் கேரளா முழுவதும் தேர்தல் காய்ச்சல் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!