பயனர்களே உஷார்!! ”பிங்க் வாட்ஸ் அப்”  மோசடி!!

 

தொழில்நுப்டம் வளர்ந்து வரும் அளவிற்கு தொழில்நுட்ப மோசடிகளும் வளர்ந்து வருவதாக சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை பெற்ற தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ் அப் இதன் லோகோ பச்சை நிறத்தில் இருக்கும் . அதற்கு பதிலாக  பிங்க் நிறத்தில் இருப்பின் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை கிளிக் செய்தால் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு விடும்.  மோசடி செயல்களுக்கு வாட்ஸ் அப்பை ஹேக்கர்கள் மிக எளிதாக பயன்படுத்துகின்றனர்.  இந்த பிங்க் வாட்ஸ் அப் லிங்க் என்ற புதிய தீம்பொருள் பாதிக்கப்பட்டவர்களின் கட்டுப்பாட்டையும் அதில் இருக்கும் முழு தரவையும் திருடி விடும்.  மொபைலில் நிலைநிறுத்தப்பட்டு சாதனத்தின் முழுத்தகவல்களையும் ஹேக்கர்கள் பெற வழிவகை செய்து விடும்.  பிங்க் வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்யவோ, தொடரவோ வேண்டாம்.  சேட்டிங் ஆப் என்ற பெயரிலோ ஆப்களை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் பெற்றால் அதை பயன்படுத்த மற்றும் பகிரக் கூடாது என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

அதுமட்டுமின்றி இந்த லிங்கை தொட்டாலே பதிவிறக்கம் செய்யப்பட்டு உடனடியாக அவர்களது தகவல்கள் திருடப்பட்டு விடுவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை பயனர்கள் ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்  ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எப்போதும் கூகுள்/ஐஓஎஸ்  அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்  அல்லது முறையான இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இதன் மூலம் ஆப்பை நிறுவிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!