undefined

உதயநிதி ராஜினாமா செய்ய வேண்டும்.... பியூஸ் கோயல் பரபரப்பு! 

 

 

சென்னையில் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் பாஜக தலைவர் பியூஷ் கோயல் சந்தித்து பேசினார். இதையடுத்து பியூஷ் கோயல் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி காலை உணவு விருந்து அளித்து கவுரவித்தார். இந்த சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி தனது நீண்டகால நண்பர் என்றும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நலனுக்காக தற்போதைய திமுக அரசு எதையும் செய்யவில்லை என்றார். இது ஊழல் நிறைந்த ஆட்சி என்றும், இளைஞர்களும் பெண்களும் திமுக ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மக்களின் ஆதரவை திமுக இழந்து விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், சனாதனத்திற்கு எதிராக பேசி உயர்நீதிமன்ற கண்டனத்துக்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்தி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த சந்திப்பில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!