undefined

 ஓடுதளத்திலிருந்து   வெளியேறி ஆற்றில் இறங்கிய விமானம்... பதற வைக்கும் வீடியோ!

 

நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புத்த ஏர் 901 விமானம் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது. இதில் 51 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் என 55 பேர் இருந்தனர். இரவு 9 மணியளவில் பத்ராபூர் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது சம்பவம் நடந்தது.

தரையிறங்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தை விட்டு வெளியேறியது. சுமார் 200 மீட்டர் தூரம் புல்வெளியில் சென்ற விமானம் அருகிலுள்ள சிறிய ஆற்றருகே நின்றது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் விமானத்தில் இருந்த 55 பேரும் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமானத்திற்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!