undefined

வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... தங்கம் அதிரடி சரிவு!

 


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு தொடக்கம் முதலே ஏற்றத்தை தொட்டு வரும் தங்கம் ஒரு சில நாட்களில் குறைந்தும் வருகிறது. அடுத்த நாளே 3 மடங்கு ஏறியும் விடுகிறது.  அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் இவைகளால்  தங்கம் விலை அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்   பிப்ரவரி 1ம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. 


மார்ச் 1ம் தேதி சவரனுக்கு மேலும் 160 ரூபாய் குறைந்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ரூ 63,520-க்கு விற்பனையானது. மார்ச் 4ம் தேதி முதல் தங்கம் விலை உயரும் என சொல்லப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 70 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ   8,010-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

மார்ச் 5ம் தேதி சவரனுக்கு ரூ440 உயர்ந்து   சவரனுக்கு ரூ 64,520-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ 360 சரிந்ததால் மக்கள் உற்சாகம் அடைந்தனர். இதனால் சவரன் ரூ 64,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் திடீரென தங்கம் விலை அதிகரித்தது. ஒரு சவரனுக்கு ரூ 320 உயர்ந்து சவரன் ரூ 64,480-க்கு விற்பனையானது. 

ஒரே நாளில் தங்கம் விலை குறைந்தும் கூடியும் போனது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றைய நிலவரப்படி வெள்ளிக்கிழமை மார்ச் 7ம் தேதி  கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7990க்கும், சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன்  ஆபரணத் தங்கத்தின் விலைரூ 63,920-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?