undefined

ப்ளீஸ்... கடன் அடைக்க கல்லீரலை வாங்கிக்கோங்க...கதறும் விவசாயி! 
 

 

 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அடோலி கிராமத்தில் சதீஷ் ஜடோல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வாஷிம் என்ற பகுதியில் உள்ள சந்தைக்கு கழுத்தில் பதாகை தொங்கியபடி சென்றார். அதில் “விவசாயிகளின் உடல் உறுப்புகளை வாங்குங்கள்” சிறுநீரகம் ரூ. 75000, கல்லீரல் ரூ.90,000 மற்றும் கண்கள் ரூ. 25,000 என எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்யும் என்று தேவேந்திர பாட்னாவிஸ் தேர்தலுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால் இப்போது கடனை விவசாயிகள் தான் அடைக்க வேண்டும் எனக் கூறுகிறார். எங்களால் எப்படி முடியும். எங்களிடம் விற்று கடன் அடைக்க எங்கள் உடல் உறுப்புக்களை தவிர எதுவும் இல்லை. அதனால் தான் என்னுடைய உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறேன். நான் என் சிறுநீரகத்தை ரூ. 60000 விற்றேன்.

ஆனால் அது என் கடனை அடைக்க போதாது . அதனால் தான் என் மனைவியின் சிறுநீரகத்தை ரூ.40000, மகனின் சிறுநீரகத்தை ரூ.20,000, என் இளைய மகனின் சிறுநீரகத்தை ரூ.10000 க்கு விற்பனை செய்துள்ளேன் எனக் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு தேவேந்திர பாட்னாவிஸ் கூறியபடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இவருக்கு 2 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் மகாராஷ்டிரா வங்கியில் சுமார் ஒரு லட்சம் கடன் இருப்பதாக தெரிகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?