அஸ்ஸாமில் பிரதமர் மோடி... 10,000 கலைஞர்களின் 'பகுரும்பா' நடனம் - ரூ.6,950 கோடியில் கசிரங்கா மேம்பாலத் திட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக, இன்று அஸ்ஸாம் செல்கிறார். இன்றும், நாளையும் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். முக்கிய திட்டங்களுக்கு தொடக்கம் வைக்கப்பட உள்ளது. பிரதமர் மோடியின் இந்த இரண்டு நாட்கள் பயணம் வடகிழக்கு மாநிலங்களின் உட்கட்டமைப்பு மற்றும் கலாச்சார அடையாளத்தை மேம்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.
குவாஹட்டியில் இன்று மாலை போடோ சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 கலைஞர்கள் இணைந்து பகுரும்பா நடனமாடும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அசாம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைய உள்ளது.
தொடர்ந்து நாளை ஜன.18ம் தேதி காலை ரூ.6,950 கோடி மதிப்பிலான 86 கி.மீ. நீள கசிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட உள்ளது. மேலும், வட இந்திய மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 2 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!