undefined

ஓமனில் மோடிக்கு உற்சாக வரவேற்பு... முழங்கிய 'வந்தே மாதரம்'.. வர்த்தகம், முதலீடுகளை அதிகரிக்க சுல்தானுடன் பேச்சுவார்த்தை!

 

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக அவர் ஓமனின் மஸ்கட் நகருக்குச் சென்றடைந்தார். முன்னதாக ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமரை, ஓமன் நாட்டு துணை பிரதமர் சயீத் ஷிஹாப் பின் தாருக் அல் சையத் விமான நிலையத்திற்கு நேரில் வந்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய மேள தாளங்கள், இசைக் கச்சேரிகள் மற்றும் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் என மஸ்கட் மாநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அங்கிருந்த இந்திய வம்சாவளியினர் 'வந்தே மாதரம்' மற்றும் 'பாரத் மாதா கி ஜெய்' என முழக்கமிட்டு பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர்.

தன்னை வரவேற்கத் திரண்டிருந்த இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, அவர்களுடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ஓமனில் தனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். இந்திய சமூகத்தினரின் இந்த பாசப்பிணைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவைப் பிரதிபலிப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரீக்கைச் சந்தித்துப் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தச் சந்திப்பின் போது வர்த்தகம், முதலீடு, எரிசக்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். இந்தியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கடல்வழி வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!